வட மத்திய மாகாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, அந்த மாகாணத்தின் அனைத்துப் பாடசாலைகளும் இன்று (20) மூடப்படும் என வட மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ சமரகோன் அவர்கள் வெளியிட்ட அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளார் என அனுராதபுர மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
