வட மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று (20) விடுமுறை

வட மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று (20) விடுமுறை
  • :

வட மத்திய மாகாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, அந்த மாகாணத்தின் அனைத்துப் பாடசாலைகளும் இன்று (20) மூடப்படும் என வட மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ சமரகோன் அவர்கள் வெளியிட்ட அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளார் என அனுராதபுர மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, 2024 ஆம் ஆண்டின் இறுதித் தவணை பரீட்சைகளில் 3, 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகள் இன்று (20) மற்றும் நாளை (21) நடைபெற இருந்த போதிலும், அப்பரீட்சைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வட மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் அவர்கள் வெளியிட்ட அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles