கொலோன்னாவ செலலிஹினி மாவத்தை கால்வாயின் நீளம் 3.25 கி.மீ ஆகும். தற்போது இக்கால்வாயை அகலப்படுத்துதல், கேபியன் (Gabion) பக்கச் சுவர்களை அமைத்தல், கால்வாயின் இருபுறமும் கொங்கிரீட் பக்கச் சுவர்களை நிர்மாணித்தல், மண் கால்வாய்கள் மற்றும் பராமரிப்பு வீதிகளை அமைத்தல் அத்துடன் சிறு பாலங்களை அபிவிருத்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனமான இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தினால் இதன் பொறியியல் திட்டமிடல் மற்றும் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படுவதுடன், தற்போது முழுத் திட்டத்தின் 60% பணிகள் நிறைவடைந்துள்ளன.


