மாத்தறை மாவட்டத்தின் 19 வீதி அபிவிருத்திக்காக 3, 239 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.
உலக வங்கி நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இணைப்பு மற்றும் அபிவிருத்தி உள்ளடங்களான ( Inclusive Connectivity and Development) திட்டத்தின் ஊடாக இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான பெறுகை செயற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.