மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவம் மார்ச் 12 அன்று மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது என மாத்தளை மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, வருடாந்த இரதோற்சவத்திற்கான கொடியேற்றம் பெப்ரவரி 18 அன்று நடைபெறவுள்ளது. அன்றைய தினம் தொடங்கி காலை மாலை என இரு வேளைகளிலும் விசேட பூஜைகள் நடைபெறும்.
தேரின் வீதி உலா மார்ச் 12 அன்று நடைபெறும். நீர்வெட்டு மார்ச் 14 அன்று மற்றும் மலர் ஊஞ்சல் மார்ச் 15 அன்றும் நடைபெறும்.
மாத்தளை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நடைபெறும் வருடாந்த இரதோற்சவம் தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல், மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர், புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார இராஜாங்க அமைச்சர் தலைமையில் நேற்று (15) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போதே இத்தகவல் வெளியிடப்பட்டது.
மாத்தளை மாவட்ட செயலாளர் தேஜானி திலகரத்ன தலைமையில் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது. இந்த நிகழ்வில் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
மாத்தளை மாவட்ட ஊடகப் பிரிவு