வெகுசன ஊடகம் மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் டொக்டர் ஹன்சக விஜேமுனி அண்மையில் (15) அரசாங்க தகவல் திணைக்களத்தின் கண்டி மாவட்ட ஊடகப் பிரிவுக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
பிராந்திய ஊடகவியலாளர்கள் சார்பாக ஊடகப் பிரிவுகளால் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து பிரதி அமைச்சர் இங்கு கவனம் செலுத்தியதுடன், அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை மிகவும் முறையாகப் பரப்புவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்த கண்காணிப்பு விஜயத்தைத் தொடர்ந்து, கண்டி மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களுடன் விசேட செய்தியாளர் சந்திப்பிலும் பிரதி அமைச்சர் பங்கேற்றதாக கண்டி மாவட்ட ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கண்டி மாவட்ட ஊடகப் பிரிவு