புதிய அரசாங்கம் ஒன்றின் கீழ் புதியதொரு ஆண்டின் வருகையுடன் முன்னைய வருடங்களை விட 2025 நன்மை அளிக்கக் கூடியதாக அமையும் என அஸ்கிரி பீடத்தின் மகா நாயக்க வரக்காகொட ஞானரத்தன தேரர் தெரிவித்ததாக கண்டி மாவட்ட ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதன் போது இலங்கையர் என்ற இனமாக சிந்தித்து, சாதி, சமயம், கட்சி என சகல பேதங்களும் மறந்து செயல்படுதல் காலத்தின் தேவையாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
மலர்ந்துள்ள புதிய ஆண்டை முன்னிட்டு அஸ்கிரி மகா பீடத்தின் வாழ்த்துக்களை தெரிவிக்கும் போதே மகாநாயக்க தேரர் இதனை குறிப்பிட்டார்
கண்டி மாவட்ட ஊடகப் பிரிவு