அம்பாறை மாவட்டத்தில் நெல் ஆலைகள் மற்றும் களஞ்சிய சாலைகள் நேற்று (02) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அம்பாறை மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இப்பரிசோதனை அம்பாறை மாவட்ட பாவனையாளர் அதிகார சபை மற்றும் சபரகமுவ மாகாண பணிப்பாளர் தாரக விதானகம ஆராச்சி உற்பத்தி உட்பட்ட குழுவினரால் நேற்று (02) மேற்கொள்ளப்பட்டது.
நாட்டில் காணப்படும் அரிசிப் பற்றாக்குறையினால் அம்பாறை மாவட்டத்தில் தற்போது காணப்படும் நிலைமைகளை சரிபார்க்கும் வகையில் இது இடம்பெற்றது.
இதன்போது அம்பாறை, சம்மாந்துறை, கல்முனை மற்றும் அக்கறைப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுகளின் நெல் ஆலை மற்றும் களஞ்சியசாலைகளில் இப்பரிசோதனைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.