All Stories

மட்டக்களப்பில் இளைஞர் யுவதிகளை வலுவூட்டும் இரு நாள் பயிற்சி பாசறை

மட்டக்களப்பு மாவட்டத்தில் இளைஞர் யுவதிகளை வலுவூட்டும் இரு நாள் பயிற்சிப்பாசறை நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர் வி.மைக்கல் கொலின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலகத்தில் நேற்று (05) இடம்பெற்றது.

மட்டக்களப்பில் இளைஞர் யுவதிகளை வலுவூட்டும் இரு நாள் பயிற்சி பாசறை

நீர்கொழும்பு லயோலா கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டியில் இராணுவத் தளபதி பங்குபற்றல்

நீர்கொழும்பு லயோலா கல்லூரி தனது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியை 2025 பெப்ரவரி 28, அன்று நடாத்தியது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

நீர்கொழும்பு லயோலா கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டியில் இராணுவத் தளபதி பங்குபற்றல்

திருகோணமலை மாவட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக ஆராய்ந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கலந்துரையாடல்

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா தலைமையில் நேற்று முன் தினம் (26) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக ஆராய்ந்த  மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கலந்துரையாடல்

வடமத்திய மாகாணத்தில் மனித-யானை மோதலைக் கட்டுப்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த நடவடிக்கை

வடமத்திய மாகாணத்தில் மனித-யானை மோதலைக் குறைக்கும் நோக்கில் கடந்த இரண்டு வாரங்களில் யானைகள் நடமாடும் பகுதிகள், தற்போதுள்ள யானை வேலிகள், வனப் பகுதிகள் மற்றும் கண்காணிப்புச் சாவடிகள் கட்டுதல் மற்றும் GIS தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரைபடமாக்கல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டதாக அனுராதபுர மாவட்ட ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டுகிறது.

வடமத்திய மாகாணத்தில் மனித-யானை மோதலைக் கட்டுப்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த நடவடிக்கை

ஊடக ஒழுக்கநெறி மற்றும் ஊடகப் பாவனை தொடர்பாக பிரதேச ஊடகவியலாளர்களைத் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சித் தொடரின் முதலாவது மாவட்டத்திற்கான செயலமர்வு மட்டக்களப்பில்..

அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில், ஊடக ஒழுக்கநெறி மற்றும் ஊடகப் பாவனை தொடர்பாக பிரதேச ஊடகவியலாளர்களைத் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சித் தொடரின் முதலாவது மாவட்டத்திற்கான செயலமர்வு, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் இன்று (27) மட்டக்களப்பு மாவட்ட செயலக ஒல்லாந்தர் கோட்டை வளாக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

 

ஊடக ஒழுக்க நெறிக் கோவை, சமூக ஊடக செயற்பாடு மற்றும் ஊடகவியலாளர்களின் பொறுப்புக்கள் தொடர்பாக இதன் போது மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தியதுடன், 2025 வரவு செலவுத் திட்ட அபிவிருத்தி வேலைத்திட்டம் மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

 

இதன் போது 10 ஊடகவியலாளர்களுக்கு கௌரவம் வழங்கப்பட்டதுடன், இவ்வாறான நிகழ்வை ஏற்பாடு செய்தமை தொடர்பாக மாவட்ட ஊடகவியலாளர்கள் தமது நன்றிகளை தெரிவித்தனர்.

 

இந்நிகழ்வில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார, மாவட்ட செயலாளர் ஜே முரளிதரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், அரசாங்க தகவல் தகவல் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் எல். பி. திலகரத்ன, தற்போதைய மொறவெவ பிரதேச செயலாளரும் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட உதவி செயலாளருமான அ. நவேஸ்வரன், மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பதிகாரி பி ஜீவானந்தன், தகவல் திணைக்களத்தின் ஏனைய அதிகாரிகள் உட்பட மாவட்டத்தின் சுமார் 50க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை சாரணியர் சங்கத்தினர் புகையிரத நிலையங்களை தூய்மைப்படுத்தி அழகுபடுத்தினர்

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை சாரணியர் சங்கத்தினர் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தினை தூய்மைப்படுத்தி அழகுபடுத்தும் நிகழ்வு ஆசியாவில் அழகிய இலங்கையினை மாற்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் உன்னத திட்டமான கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை சாரணியர் சங்கத்துடன் இணைந்து
நாடளாவிய ரீதியில் உள்ள புகையிரத நிலையங்களை தூய்மைப்படுத்தி, அழகுபடுத்தும் வேலைத்திட்டம் இடம் பெற்றது.

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை சாரணியர் சங்கத்தினர் புகையிரத நிலையங்களை தூய்மைப்படுத்தி அழகுபடுத்தினர்

மட்டக்களப்பில் போதைப்பொருள் தடுப்பு செயலணியின் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான போதைப்பொருள் தடுப்பு  செயலணியின் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர்  ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் மேற்பார்வையில் போதைப்பொருள் முற்தடுப்பு மாவட்ட இணைப்பாளர் ப.தினேஸ் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (24) இடம் பெற்றது.

மட்டக்களப்பில் போதைப்பொருள் தடுப்பு செயலணியின் கலந்துரையாடல்

முல்லைத்தீவில் கடற்கரை பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் நாளை

Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுமார் 20 கடற்கரை பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவில் கடற்கரை பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் நாளை

கிழக்கு மாகாண தொழில் முயற்சியாளர்களுக்கான விழிப்புணர் கருத்தரங்கும் கண்காட்சியும்

கிழக்கு மாகாணத்திற்கான தொழில் முயற்சியாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தர இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் நேற்று (18) திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது. 

கிழக்கு மாகாண தொழில் முயற்சியாளர்களுக்கான விழிப்புணர் கருத்தரங்கும் கண்காட்சியும்

கண்டியை உலக புராதன கேந்திரத் தலம் ஒன்றாக மாற்றுவதற்குத் திட்டம்

கண்டி நகரை மையமாகக் கொண்ட 168 அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது. 

கண்டியை உலக புராதன  கேந்திரத் தலம்  ஒன்றாக மாற்றுவதற்குத் திட்டம்

எக மிடட (ஒரு கைப்பிடி) - கொவி பிமட (விவசாய நிலத்திற்கு) தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் களுத்துறை மாவட்ட நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது

ஆகாரத்தில் பாதுகாப்பானதைப் பெற்றுக் கொள்வதற்கான  தேசிய திட்டத்தின் களுத்துறை மாவட்ட ஆரம்ப நிகழ்வு நேற்று (15) களுத்துறை நாகொட கமநல சேவை பிரதேசத்தின் அழுபோகஹலந்த  பிரிவில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது.

எக மிடட (ஒரு கைப்பிடி)  - கொவி பிமட (விவசாய நிலத்திற்கு) தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் களுத்துறை மாவட்ட நிகழ்வு  ஆரம்பிக்கப்பட்டது

கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் நடமாடும் சேவை

கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் மற்றும் மாவட்ட செயலகம் இணைந்து மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் காணப்படும் சில முக்கிய பிரச்சினைகள் தொடர்பாகவும், தீர்க்கப்படாத பிரச்சினைகளை ஆளுநரின் வழிகாட்டுதலின் கீழ் உரிய அதிகாரிகளின் மூலம் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் நடமாடும் சேவை

ரிதியகமவில் மூன்று மாத சிங்கக் குட்டிகளுக்குப் பெயர் சூட்டப்பட்டது

அம்பலாந்தோட்டை - ரிதியகம சஃபாரி பூங்காவில் மூன்று மாத வயதுடைய ஆறு சிங்கக் குட்டிகளுக்குப் பெயரிடும் விழா நேற்று (12) நடைபெற்றது.

ஆறு சிங்கக் குட்டிகளுக்காக 4000 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதுடன் அதில் தெரிவுசெய்யப்பட்ட ஆறு பெயர்களை சூட்டும் நிகழ்வு மிருகக் கட்சிசாலைத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர். சி. ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது. 

ரிதியகமவில் மூன்று மாத சிங்கக் குட்டிகளுக்குப் பெயர் சூட்டப்பட்டது
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]