அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில், ஊடக ஒழுக்கநெறி மற்றும் ஊடகப் பாவனை தொடர்பாக பிரதேச ஊடகவியலாளர்களைத் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சித் தொடரின் முதலாவது மாவட்டத்திற்கான செயலமர்வு, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் இன்று (27) மட்டக்களப்பு மாவட்ட செயலக ஒல்லாந்தர் கோட்டை வளாக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
ஊடக ஒழுக்க நெறிக் கோவை, சமூக ஊடக செயற்பாடு மற்றும் ஊடகவியலாளர்களின் பொறுப்புக்கள் தொடர்பாக இதன் போது மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தியதுடன், 2025 வரவு செலவுத் திட்ட அபிவிருத்தி வேலைத்திட்டம் மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
இதன் போது 10 ஊடகவியலாளர்களுக்கு கௌரவம் வழங்கப்பட்டதுடன், இவ்வாறான நிகழ்வை ஏற்பாடு செய்தமை தொடர்பாக மாவட்ட ஊடகவியலாளர்கள் தமது நன்றிகளை தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார, மாவட்ட செயலாளர் ஜே முரளிதரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், அரசாங்க தகவல் தகவல் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் எல். பி. திலகரத்ன, தற்போதைய மொறவெவ பிரதேச செயலாளரும் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட உதவி செயலாளருமான அ. நவேஸ்வரன், மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பதிகாரி பி ஜீவானந்தன், தகவல் திணைக்களத்தின் ஏனைய அதிகாரிகள் உட்பட மாவட்டத்தின் சுமார் 50க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.