புத்தளை தானிய களஞ்சியத்திற்கு விவசாயம், கால்நடை வளங்கல், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கண்காணிப்பு விஜயம்

புத்தளை தானிய களஞ்சியத்திற்கு விவசாயம், கால்நடை வளங்கல், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கண்காணிப்பு விஜயம்
  • :

விவசாயம், கால்நடை வளங்கல், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர், கே.டி. லால்காந்த அண்மையில் புத்தளையில் உள்ள அரச தானியக் களஞ்சியத்தை ஆய்வு செய்தார்.

அங்கு களஞ்சியசாலையில் உள்ள தானிய இருப்புகளை அமைச்சர் ஆய்வு செய்ததுடன், அதன் ஊழியர்களுடன் ஒரு சுமுகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

மேலும்,, களஞ்சியசாலைக்கு பொறுப்பான அதிகாரிகளுடன் சேமித்து வைக்கப்பட்டுள்ள தானியங்களின் அளவு மற்றும் அத்தகைய சேமிப்பால் நாட்டில் அரிசி பிரச்சினை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் சோளம் குறித்து சிக்கல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அமைச்சர் கலந்துரையாடியதுடன், தரவு பதிவுகளைப் பார்த்து களஞ்சியசாலையையும் ஆய்வு செய்தார்.

அத்துடன், நிறுவனம் முறையாக நடத்தப்படுவதையும் அதன் பராமரிப்பு நடவடிக்கைகள் மிகவும் ஒழுங்கான முறையில் மேற்கொள்ளப்படுவதையும் உறுதி செய்ய அரசாங்கம் தொடர்ந்து தலையிடும் என்று அமைச்சர் அதிகாரிகளிடம் தெரிவித்தார், மேலும் அதிகாரிகள் அந்த அனைத்து விடயங்களிலும் தங்கள் உடன்பாட்டை வெளிப்படுத்தினர்.

Related Articles