வடமத்திய மாகாணத்தில் மனித-யானை மோதலைக் கட்டுப்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த நடவடிக்கை

வடமத்திய மாகாணத்தில் மனித-யானை மோதலைக் கட்டுப்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த நடவடிக்கை
  • :

வடமத்திய மாகாணத்தில் மனித-யானை மோதலைக் குறைக்கும் நோக்கில் கடந்த இரண்டு வாரங்களில் யானைகள் நடமாடும் பகுதிகள், தற்போதுள்ள யானை வேலிகள், வனப் பகுதிகள் மற்றும் கண்காணிப்புச் சாவடிகள் கட்டுதல் மற்றும் GIS தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரைபடமாக்கல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டதாக அனுராதபுர மாவட்ட ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டுகிறது.

இந்தப் பணிகள் அனுராதபுரம், பொலன்னறுவை மாவட்ட செயலகங்களிலும், அனுராதபுரம் வனவிலங்கு அலுவலகத்திலும் களத்தில் உள்ள இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டன.

இந்த டிஜிட்டல் வரைபடமாக்கல் வில்பத்து பகுதியில் இருந்தே தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, டிஜிட்டல் வரைபடமாக்கல் மூலம் மனித-யானை மோதலைக் கட்டுப்படுத்த எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து எதிர்காலத்தில் வெற்றிகரமான சோதனைகளை மேற்கொள்வதே இதன் நோக்கமாகும்.

இது தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என்று வடமத்திய மாகாண ஆளுநரின் செயலாளர் விஜய வனசிங்க தெரிவித்தார்.

 

அனுராதபுர மாவட்ட ஊடகப் பிரிவு.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]