ஆகாரத்தில் பாதுகாப்பானதைப் பெற்றுக் கொள்வதற்கான தேசிய திட்டத்தின் களுத்துறை மாவட்ட ஆரம்ப நிகழ்வு நேற்று (15) களுத்துறை நாகொட கமநல சேவை பிரதேசத்தின் அழுபோகஹலந்த பிரிவில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது.
இத்திட்டத்தின் கீழ் விவசாயம் செய்யப்படாத வயல் மற்றும் விவசாயம் செய்யக்கூடிய நிலங்களில் வினைத்திறனாக விரைவாக செய்கை பண்ணுவதற்கும் , தற்போது கமத்தொழிலில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கான ஆழமான அறிவு மற்றும் விவசாய செயற்பாடுகளுக்காக அவசியமான பசளை உட்பட ஏனைய அத்தியாவசியமானவற்றை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேஷீய குசகினி நீவாலண்ணட ஹெட தவசே சறு எல லபன்னட (உள்ளூர் பசியை நிவர்த்தி செய்வதற்கு நாளைய தினத்தில் பயனளிக்கும் நெல்மணிகளை வழங்குவதற்கு) என்பதை நோக்காகக் கொண்டு களுத்துறை மாவட்ட நிகழ்ச்சி இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டதுடன், அதற்கு தற்போது செய்கை பண்ணப்படாத வயல் மற்றும் விவசாய நிலங்களின் உரிமையாளர்களுக்கு முதற்கட்டமாக விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சியும் அமைச்சரின் தலைமையில் இடம்பெற்றது.
அவ்வாறே தற்போது விவசாய செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வேளாண்மையை கண்காணிக்கும் பணியிலும் அமைச்சர் ஈடுபட்டார்.
இந்நிகழ்வு கமநல அபிவிருத்தி திணைக்களம், கமத் தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, களுத்துறை மாவட்ட செயலகம் ஆகியன ஒன்றிணைந்து நடாத்தப்பட்டது.