நீர்கொழும்பு லயோலா கல்லூரி தனது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியை 2025 பெப்ரவரி 28, அன்று நடாத்தியது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
வருகை தந்த இராணுவத் தளபதியை லயோலா கல்லூரியின் அதிபர் அருட்தந்தை டி.எம்.ஜே. கென்னடி பெரேரா அவர்கள் அன்புடன் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து பாடசாலை மாணவ சிப்பாய் அணியினால் மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வு அஞ்சலோட்டத்துடன் ஆரம்பமாகியது. அதைத் தொடர்ந்து ஒரு அற்புதமான அணிவகுப்பு நடைபெற்றது. பதக்க வழங்கும் நிகழ்வின் போது, இராணுவத் தளபதி வெற்றியாளர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கியதுடன், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கும் வெற்றி பெற்ற இல்லங்களுக்கும் பாராட்டு தெரிவித்தார்.
பின்னர், இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் பாடசாலையின் அதிபர் இராணுவத் தளபதிக்கு ஒரு நினைவுப் பதாகையை வழங்கினார்.