மட்டக்களப்பு மாவட்டத்தில் இளைஞர் யுவதிகளை வலுவூட்டும் இரு நாள் பயிற்சிப்பாசறை நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர் வி.மைக்கல் கொலின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலகத்தில் நேற்று (05) இடம்பெற்றது.
மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் மற்றும் மாவட்ட செயலகமும் இணைந்து இளைஞர் யுவதிகளுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கும் புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதற்குமான ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை மாவட்ட மனித வள மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ. கருணாகரனினால் வளப்பகிர்வின் மூலம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் தொழில் விருத்தி படிமுறைகள் தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட்டன. இளைஞர் யுதவிகளை நவீன உலகிற்கு எற்றவாறு புதிய தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கு தயார்ப்படுத்தபட்டமை குறிப்பிடத்தக்கது.