மட்டக்களப்பு மாவட்ட சுய தொழில் முயற்சியாளர்கள் மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக கேட்டறிந்து கொள்ளும் கலந்துரையாடல் கூட்டம் நேற்று (30) திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சுய தொழில் முயற்சியாளர்கள் மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக கேட்டறிந்து கொள்ளும் கலந்துரையாடல் கூட்டம் நேற்று (30) திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது.
நாட்டின் வளர்ச்சிக்காக சிறந்த தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நாட்டில் 15,000 தொழில் முயற்சியாளர்களை இனங்கண்டு அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேசிய திட்டத்தின் கிழக்கு மாகாணத்திற்கான வேலைத்திட்டம் இன்று (30) மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டது.
நுவரெலியாவில் உள்ள சாந்திபுர ஈகிள்ஸ் பார்வை மையம் நேற்று (26) அமைச்சர் விஜித ஹேரத்தின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதையும் உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு 'ஈகிள்ஸ்' பார்வையாளர் மையம் கட்டப்பட்டுள்ளது.
அந்த மத்திய நிலையத்திலிருந்து, நுவரெலியா நகரம், கிரகரி ஏரி, ஹக்கல, ஏழு கன்னி மலைத்தொடர் உள்ளிட்ட பல சிறப்பு இடங்களைக் காண சுற்றுலாப் பயணிகள் வாய்ப்பு பெறுவார்கள்.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான டிக்கெட்டுகள் QR முறை மூலம் மட்டுமே வழங்கப்படும் என்று நுவரெலியா மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது .
நுவரெலியா மாவட்ட ஊடகப் பிரிவு
இந்த ஆண்டு பெரும்போகத்தின் நெல் அறுவடையைத் தொடர்ந்து விவசாயிகளிடமிருந்து அரசாங்கம் கொள்வனவு செய்யும் மூன்று இலட்சம் மெட்ரிக் டொன் நெல்லை பாதுகாப்பான இருப்பாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி சாந்த ஜயரத்ன தெரிவித்தார்.
சுற்றுலாத் துறையை எதிர்காலத்தில் மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்தை நனவாக்கும் நோக்கில், இன்று (23) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன தலைமையில் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய பல தரப்பினரின் பங்கேற்புடன் சந்திப்பு நடைபெற்றது.
திருகோணமலை மாவட்டம். கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ், சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய அரசு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சுற்றுலா தொடர்பான சங்கங்களின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பொலன்னறுவை மட்டக்களப்பு பிரதான வீதியின் (கல்லேல்லயிலிருந்து மன்னம்பிட்டி வரையான வீதி) இன்று (21) காலை 7.00 மணிக்குப் பின்னர் சகல கனரக வாகனங்களுக்காக மாத்திரம் திறந்துவிடப்பட்டுள்ளதாக பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலன்னறுவை மாவட்ட ஊடகப் பிரிவு
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிக பட்ச மழையாக 123.5 மில்லி மீற்றர் வாகனேரி பிரதேசத்தில் பதிவாகியுள்ளதுடன் வாகனேரி குளத்தில் 19.2"அடி நீர்மட்டம் அதிகரித்து நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.
உருகாமம் பகுதியில் 101.1 மில்லி மீற்றர் மழை பெய்து, உருகாமம் குளத்தில் 15.8 " அடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது,
இதேவேளை உன்னிச்சை பிரதேசத்தில் 84.0மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதுடன், உன்னிச்சை குளத்தில் 33 ஒருஅடிக்கு நீர் மட்டம் அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.
தும்பங்கேணியில் 62.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் நவகிரி பிரதேசத்தில் 62.3 மில்லி மீற்றர் பதிவாகியுள்ளது, மட்டக்களப்பில் 65.2மில்லி மீற்றர் மழையும், கிரான் பகுதியில் 68 மில்லி மீற்றரும் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
குறைந்த மழை வீழ்ச்சியாக கட்டுமுறிவுக்குளத்தில் 18 மில்லி மீற்றர் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கை கிழக்குப் பல்கலைகழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் விரிவாக்கல் கற்றல்கள் நிலையத்தினால் நடாத்தப்பட்ட டிப்ளோமா மற்றும் சான்றிதழ் கற்கைகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு (18) கிழக்குப் பல்கலைக்கழக மட்டக்களப்பு தொழில்நுட்ப பூங்கா கேட்போர் கூடத்தில் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் எஸ். ஜெயராசா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் “விவசாயத்தில்” 60 பேரும் “தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் 16 பேரும் “ஆய்வுக்கூட தொழில்நுட்பத்தில்” 04 பேரும் “பன்மைத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சேவை வழங்கலின் மூலம் அமைதியை பேணுதல்” பாட நெறியில் 09 பேரும் டிப்ளேமா சான்றிதழ்களை கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் இடமிருந்து பெற்றுக்கொண்டனர்.
இதன்போது கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக முதல்வர், பல்கலைக்கழக பீடாதிபதிகள் கல்வி சார், சாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மகாவலி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக, மட்டக்களப்பு - பொலன்னறுவை பிரதான வீதி நேற்று (19) மாலை 5.00 மணிக்குப் பிறகு கல்லேல்லயிலிருந்து மன்னம்பிட்டி வரையிலான பகுதியில் அனைத்து வாகனங்களுக்கும் முழுமையாக மூடப்பட்டுள்ளது என பொலன்னறுவை மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வட மத்திய மாகாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, அந்த மாகாணத்தின் அனைத்துப் பாடசாலைகளும் இன்று (20) மூடப்படும் என வட மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ சமரகோன் அவர்கள் வெளியிட்ட அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளார் என அனுராதபுர மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்துச் சேவை நடாத்தும் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் சிற்றூர்தி உரிமையாளர்களுடான கலந்துரையாடலானது அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (16.01.2025) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சுற்றுச்சூழல் சட்ட அமுலாக்கல் குழு கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டை மாநாட்டு மண்டபத்தில் நேற்று (16) இடம் பெற்றது.
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]