இந்த ஆண்டு பெரும்போகத்தின் நெல் அறுவடையைத் தொடர்ந்து விவசாயிகளிடமிருந்து அரசாங்கம் கொள்வனவு செய்யும் மூன்று இலட்சம் மெட்ரிக் டொன் நெல்லை பாதுகாப்பான இருப்பாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி சாந்த ஜயரத்ன தெரிவித்தார்.
பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள சிறிய அளவிலான அரிசி உற்பத்தியாளர்களுடன், பொலன்னறுவை மாவட்ட நிருவாக வளாகத்தில் நேற்று (23) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியால் தமது வியாபாரங்கள் முடங்கியுள்ளதாக சுட்டிக்காட்டிய சிறிய அளவிலான அரிசி உற்பத்தியாளர், இந்த விடயம் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்;தி; முன்வைத்த நெல் கொளவனவு செயல்பாட்டில் தாம் அதிக பங்களிப்பை வழங்குவதாகவும் சுட்டிக்காட்டினர்.
இந்த நிகழ்வில் கூட்டுறவு அமைச்சின் செயலாளர், சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கங்களின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
பொலன்னறுவை மாவட்ட ஊடகப் பிரிவு