மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிக பட்ச மழையாக 123.5 மில்லி மீற்றர் வாகனேரி பிரதேசத்தில் பதிவாகியுள்ளதுடன் வாகனேரி குளத்தில் 19.2"அடி நீர்மட்டம் அதிகரித்து நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.
உருகாமம் பகுதியில் 101.1 மில்லி மீற்றர் மழை பெய்து, உருகாமம் குளத்தில் 15.8 " அடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது,
இதேவேளை உன்னிச்சை பிரதேசத்தில் 84.0மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதுடன், உன்னிச்சை குளத்தில் 33 ஒருஅடிக்கு நீர் மட்டம் அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.
தும்பங்கேணியில் 62.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் நவகிரி பிரதேசத்தில் 62.3 மில்லி மீற்றர் பதிவாகியுள்ளது, மட்டக்களப்பில் 65.2மில்லி மீற்றர் மழையும், கிரான் பகுதியில் 68 மில்லி மீற்றரும் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
குறைந்த மழை வீழ்ச்சியாக கட்டுமுறிவுக்குளத்தில் 18 மில்லி மீற்றர் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.