பொலன்னறுவையை சுற்றுலா நகரமாக முன்னேற்றும் நோக்கில் விசேட கலந்துரையாடல் நேற்று (03) பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றதாக மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பொலன்னறுவையை மையமாக வைத்து தங்குமிடம் இல்லாமை தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.
அதன்படி சுற்றுலா கைத்தொழிலின் நன்மைகள் மக்களுக்கு கிடைத்தல் மற்றும் அதன் பயன்கள் மக்களுடன் பகிர்ந்து கொள்ளப்படல் போன்ற வேலைத் திட்டங்களை தயாரித்தல் மற்றும் பொலன்னறுவைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் போன்ற விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன.
இதன் போது வீடமைப்பு பிரதி அமைச்சர் டி. பி. சரத், மற்றும் அவுஸ்திரேலியாவின் முண்ணனி முதலீட்டு நிறுவனம் ஒன்றின் நிறைவேற்று அதிகாரி மெய்தன்ஸ் மேஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பொலன்னறுவை மாவட்ட ஊடக பிரிவு