வானிலை முன்னறிவிப்பு

வானிலை முன்னறிவிப்பு
  • :

ஏப்ரல் 20ஆம் திகதி 2025 காலை 5.30மணிக்கு வெளியிடப்பட்டது 

 

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மற்றும் பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை, மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நண்பகல் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

 

சில நேரங்களில் சில இடங்களில் 50மில்லி மீட்டருக்கும் குறைவான மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது. 

 

மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை, மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் மழை பெய்யும். 

 

 

அதிக காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் காரணமாக ஏற்படும் அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

 

காலை வேளையில் மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பனி மூட்டம் காணப்படலாம்.

Related Articles