யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் 06.02.2025 ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட சுற்றாடல் குழுக் கூட்டத்தில் வணக்கஸ்தலங்கள் மற்றும் பொது நிகழ்ச்சியின் போது பயன்படுத்தும் ஒலிபெருக்கிகளால் பொதுமக்களுக்கு அசெளகரியங்கள் ஏற்படுவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கவனத்திற்கு முன்வைக்கப்பட்டது.
வணக்கஸ்தலங்கள் மற்றும் பொது நிகழ்ச்சியின் போது ஒலிபெருக்கிகளை பயன்படுத்தும் போது அயலில் உள்ளவர்கள், மாணவர்கள் மற்றும் வயோதிபர்களுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் ஒலிபெருக்கிகளை அதிக ஒலி எழுப்பி இடையூறு செய்யாமல் பயன்படுத்துமாறு அரசாங்க அதிபர் அவர்கள் வினயமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.