தூய்மையான இலங்கை தேசிய திட்டத்தை வலுப்படுத்துவதற்கு ஏதுவாகவும் பசுமை உற்பத்தித்திறன் (Green Productivity ) எண்ணக்கருவிற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையிலும் கழிவு முகாமைத்துவத் திட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்றய (04) தினம் மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பசுமை உற்பத்தித்திறன் கொள்கைப் (Green Productivity Policy ) பிரகடனமும் அதனைத் தொடர்ந்து கழிவு முகாமைத்துவத் திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
உகந்த வள நுகர்வு மூலம் உற்பத்தித்திறனை அதிகரித்தல்,
சுற்றுச்சூழலில் கழிவுகளை அகற்றுவதற்குப் பதிலாக அவற்றை மீட்டெடுப்பதையும் மறுசுழற்சி செய்வதையும் ஊக்குவித்தல்,
பசுமை உற்பத்தித்திறன் தொடர்பான அறிவை மேம்படுத்துதல் உட்பட பல்வேறு சுற்றுப்புறச் சூழல் சார்ந்த பொறுப்புக்களைக் கருத்தில் கொண்டு இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேலும் தூய்மையான இலங்கை தேசிய திட்டத்தின் ஒர் அங்கமாக சூழல் சார் மேம்பாட்டுத் திட்டமாக இது அமைவதும் குறிப்பிடத்தக்கது.