தென்னைப் பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்கு எந்தவொரு அரசாங்கத்திடமும் முறையான கொள்கை இல்லாததே தேங்காய் தட்டுப்பாட்டிற்குக் காரணம் என்று பிரதமர் நேற்று (05) பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
தென்னைப் பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் ஒரு முறையான கொள்கையை வகுத்து வருவதாகவும், அதுவரை பல குறுகிய கால திட்டங்கள் பின்பற்றப்பட்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இதற்கமைய, இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் தென்னைப் பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்ய தீர்மாணித்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.