தென்பகுதி மக்களுக்கு யாழிலிருந்து சிறு தொழில் முயற்சியாளர் நிதி உதவி

தென்பகுதி மக்களுக்கு யாழிலிருந்து சிறு தொழில் முயற்சியாளர் நிதி உதவி
  • :

அண்மையில் டித்வா புயலில் பாதிக்கப்பட்ட தென்பகுதி மக்களுக்கு யாழிலிருந்து -  கருவாடு உற்பத்தி செய்யும் பெண் சிறு தொழில் முயற்சியாளரான திருமதி கமலினி அண்ணாத்துரை அவர்கள் நேற்று (02.12.2025)  அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவதற்காக. அரசாங்கத்தால்  அறிவிக்கப்பட்ட இலங்கை வங்கி கணக்கிற்கு ரூபா 50,000.00 நிதியினை வைப்பிலிட்டு, அதற்கான பற்றுச்சீட்டின் பிரதியினை அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் கையளித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த திருமதி கமலினி அண்ணாத்துரை அவர்கள், தம்மால் யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்  வழங்கப்பட்டதாகவும், தொடர்ச்சியாக வழங்கவிருப்பதாகவும், இவ் நிதியினை பாதிக்கப்பட்ட தென்பகுதி மக்களுக்கு வழங்குவதாகவும் அரசாங்க அதிபரிடம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் போது இவ்வாறான பெண் சிறு தொழில் முயற்சியாளரின் முன்மாதிரியான நல்லிணக்கச் செயற்பாட்டை அரசாங்க அதிபர் பெரிதும் பாராட்டி தமது நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார்.


Related Articles