தேசிய மகளிர் ஆணைக்குழுவை சுயாதீனமாகவும் வலுவாகவும் முன்னெடுத்துச் செல்வதற்கு பாராளுமன்றத்தின் அதிகபட்ச ஆதரவு வழங்கப்படும்

தேசிய மகளிர் ஆணைக்குழுவை சுயாதீனமாகவும் வலுவாகவும் முன்னெடுத்துச் செல்வதற்கு பாராளுமன்றத்தின் அதிகபட்ச ஆதரவு வழங்கப்படும்
  • :
தேசிய மகளிர் ஆணைக்குழுவை சுயாதீனமாகவும் வலுவாகவும் முன்னெடுத்துச் செல்வதற்கு பாராளுமன்றத்தின் அதிகபட்ச ஆதரவு வழங்கப்படும் – கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன

 சுயாதீன ஆணைக்குழுவாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய மகளிர் ஆணைக்குழு சுயாதீனமாகவும், வலுவான நிலையிலும் செயற்படுவதற்குத் தேவையான அதிகபட்ச ஆதரவைப் பாராளுமன்றம் வழங்கும் எனப் பாராளுமன்ற வளாகத்தில் நேற்றையதினம் (23) தன்னைச் சந்தித்த தேசிய மகளிர் ஆணைக்குழுவின் தலைவி கிரேஸ் ஆசிர்வாதம் (Ms. Grace Asirwatham) உட்பட ஆணைக்குழுவின் உறுப்பினர்களிடம் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

 
பத்தாவது பாராளுமன்றத்தினால் இலங்கையில் முதன்முறையாக நிறுவப்பட்ட சுயாதீன ஆணைக்குழுவான தேசிய மகளிர் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களுக்கு கௌரவ சபாநாயகர் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இலங்கையின் மக்கள் தொகையில் 51 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண்களுக்காக தேசிய மகளிர் ஆணைக்குழுவிற்கு பாரியதொரு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
 
உலகின் முதலாவது பெண் பிரதமரை உருவாக்கிய நாடு இலங்கை என்றும், தெற்காசியாவின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் நமது நாட்டுப் பெண்கள் சமூகத்தில் முன்னோக்கி வந்துள்ளனர் என்றும் அவர் மேலும் விளக்கமளித்தார். எனவே, இலங்கைப் பெண்களை மேலும் வலுவாக அதிகாரப்படுத்துவதற்காக சரியான மற்றும் சுயாதீனமான முடிவுகளை எடுப்பதற்கு தேசிய மகளிர் ஆணைக்குழு செயற்பட வேண்டும் என கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன அவர்கள் இதன்போது வலியுறுத்தினார்.
தேசிய மகளிர் ஆணைக்குழுவில் தற்போது காணப்படும் நிர்வாக மற்றும் ஏனைய உள்கட்டமைப்புப் பிரச்சினைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இரு தரப்பினருக்கும் இடையில் இங்கு மேலும் கலந்துரையாடப்பட்டது.
 
இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, தேசிய மகளிர் ஆணைக்குழுவின் தலைவி கிரேஸ் ஆசிர்வாதம், ஆணைக்குழுவின் உறுப்பினர்களான ஸ்ரீன் சாரூர், ஜனஹா செல்வராஸ், ஜயந்தி உத்பலா, வைத்தியர் பத்மா குணரத்ன, கலாநிதி கலன சேனாரத்ன மற்றும் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.டி.ஆர். ஒல்கா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Articles