இந்திய நிதியுதவி யின் மலையக மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட 4700 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகப் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி தலைமையில் இன்று (24) மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த வீடமைப்பு திட்டத்தின் கீழ் அனர்த்த அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டடங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தினால் அடையாளம் காணப்பட்ட குடும்பங்களுக்கு 2026 வீடுகளில் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், ஏனைய வீடுகளை அடையாளம் காணப்பட்ட தோட்டங்களில் பணிபுரியும் மக்களுக்காக வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.


