உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய போலியோ ஒழிப்பு ஆணைக்குழுவின் (SEA-RCCPE) 19வது அமர்வு, சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி அவர்களின் தலைமையில், கொழும்பில் உள்ள சின்னமன் லைஃப் Cinnamon Life ஹோட்டலில் இன்று காலை (24) ஆரம்பமாகியது.
இந்தியா, இந்தோனேசியா, தென் கொரியா, (Democratic People's Republic of Korea) இலங்கை, தாய்லாந்து, திமோர் லெஸ்டே, நேபாளம், பங்களாதேஷ், பூட்டான், மாலைதீவுகள் மற்றும் மியான்மார் ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர்கள், பிராந்தியத்தின் போலியோ நோயை இல்லாது செய்தல், சவால்கள் மற்றும் அபாயங்களை நிர்வகித்தல், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்தல், உலகளாவிய போலியோ ஒழிப்பு, கட்டுப்பாட்டு குழுக்களின் செயல்திறனை மதிப்பாய்வு செய்தல் மற்றும் பரிந்துரைகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்களை நடத்தி முடிவுகளை எடுக்க உள்ளனர்.
மேற்கூறிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏறத்தாழ நூறு நிபுணர்கள் இந்த அமர்வில் பங்கேற்றனர்.
இந்த அமர்வு 26ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
இங்கு உரையாற்றிய சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர். ஹன்சக விஜேமுனி, உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய போலியோ ஒழிப்பு ஆணைக்குழுவின் 19வது அமர்விற்காக இலங்கைக்கு வருகை தந்த அனைத்து நிபுணர்களையும் வரவேற்றதோடு, இந்த முக்கியமான பிராந்திய நிகழ்வை இலங்கையில் நடத்துவது சிறந்த கௌரவமாக கருதுவதாக தெரிவித்தார்.
நாட்டில் நடைமுறையில் உள்ள சுகாதார சேவை 1926ஆம் ஆண்டு முதல் உள்ளது என்பதை நினைவு கூர்ந்த அமைச்சர், அது பல நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக மாறியுள்ளது என்றும், அது ஒரு வலுவான சமூக அடிப்படையிலான சுகாதார அமைப்பு என்றும் குறிப்பிட்டார்.
2014-ஆம் ஆண்டு முதல் போலியோ இல்லாத பிராந்தியமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டில் ஒரு வலுவான நோய்த்தடுப்புத் திட்டமும் உள்ளது. கடந்த நூற்றாண்டின் இடப்பட்ட வலுவான பொது சுகாதார அடித்தளத்தின் அடிப்படையிலேயே இந்த வெற்றி அமைந்துள்ளது என்பதை அமைச்சர் நினைவு கூர்ந்தார். மேலும், தொடர்ச்சியான விழிப்புணர்வும் நீடித்த அர்ப்பணிப்பும் போலியோவைத் தடுக்க எப்போதும் உதவும் என்றும் அவர் கூறினார்.
இன்று தொடங்கிய இந்த அமர்வின் மூன்று நாட்களில், பிராந்திய மற்றும் தேசிய அளவிலான முன்னேற்றம், அபாய நிலைகள், கட்டுப்பாட்டு முயற்சிகள் ஆகியவற்றை மதிப்பாய்வு செய்து பரிந்துரைகளை வழங்குவதில் கவனம் செலுத்தப்படும் என்றும், போலியோ இல்லாத உலகத்தை நோக்கிய உலகளாவிய முயற்சியை முன்னெடுத்துச் செல்வதில் இந்த 19-வது அமர்வு மிகவும் உதவியாக இருக்கும் என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) தென்கிழக்கு ஆசிய பிராந்திய போலியோ ஒழிப்புச் சான்றிதழின் 18வது ஆண்டு அமர்வு, கடந்த ஆண்டு ஜூலை 29 முதல் 31 வரை தாய்லாந்தின் பாங்காக்கில் வெற்றிகரமாக நடைபெற்றது. உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியம் 2014-ல் அதிகாரப்பூர்வமாக போலியோ இல்லாத பிராந்தியமாகச் சான்றளிக்கப்பட்டது.
இந்த அமர்வில், உலகளாவிய போலியோ ஒழிப்பு ஆணையத்தின் (GCC) தலைவர் பேராசிரியர் டேவிட் சாலிஸ்பரி, WHO தென்கிழக்கு ஆசிய பிராந்திய ஆணையத்தின் தலைவர் பேராசிரியர் வைத்திங ஸ்ரீஜனா ஸ்ரேஸ்தா, WHO தென்கிழக்கு ஆசியாவின் நோய்த்தடுப்பு மற்றும் தடுப்பூசி மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் வினோத் குமார். இந்த அமர்வில் இலங்கையின் நிர்வாக பொறுப்பாளர் வைத்தியர் மோமோ டேகுச்சி, இலங்கையின் தொற்றுநோயியல் துறையின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் பாலித கருணாபெமா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான அறிஞர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் கலந்து கொண்
டனர்.


