தற்போது இலங்கையில் அதிகமாக டீசல் வலுசக்திப் புகையிரதங்கள் அதிகமாக இயங்குவதுடன், அதன் இயங்குநிலை வினைத்திறன் மற்றும் சேவைகளின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்காக பெரும்பாலான புகையிரதப் பாதைகள், சமிக்ஞை முறைமைகள் மற்றும் அதற்குரிய உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது. அதனால், நவீன மற்றும் நிலைபேறான புகையிரதப் போக்குவரத்து முறைமையை நிறுவும் நோக்கில், புதிய புகையிரதப் பாதைகளை நிர்மாணித்தல், இரட்டைப் பாதைகளை அமைத்தல், சமிக்ஞை முறைமைகளை மேம்படுத்தல் மற்றும் புகையிரதப் பாதைகளை இலத்திரனியல்மயப்படுத்துவதை மையமாகக் கொண்டு புகையிரத அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் சில இலங்கை அரசால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, போக்குவரத்து இயலளவை அதிகரித்தல், பிரயாணக் காலத்தைக் குறைத்தல் மற்றும் சூழல் நேயம்மிக்க பேண்தகு பொதுப் போக்குவரத்துச் சேவைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் அதிக பயணிகள் பிரயாணம் செய்கின்ற புகையிரதப் பாதைகளை இலத்திரனியல்மயப்படுத்துவதற்கு அடையாளங் காணப்பட்டுள்ளது.
குறித்த அபிவிருத்திப் பணிகள் நாட்டின் நீண்டகால போக்குவரத்து நவீனமயப்படுத்தல் மூலோபாயத்தின் ஒரு பகுதியாக சர்வதேச அபிவிருத்தி நிறுவனங்களின் ஒத்துழைப்புக்களுடன் அமுல்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, கீழ்க்காணும் புகையிரதப் பாதைகளில் இலத்திரனியல் மயப்படுத்தலுடன் கூடிய நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதற்குத் தேவையான படிமுறைகளை மேற்கொள்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பிரதான வீதி – கம்பஹஹஹா, வெயாங்கொட, மீரிகம மற்றும் பொல்காவெல போன்ற புகையிரத நிலையங்களின் கட்டிடங்களை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட மருதானை தொடக்கம் றாகம வரையான புகையிரதப் பாதை
களனிவெலி பாதை – மருதானை தொடக்கம் மாகும்புர வரையான புகையிரதப் பாதை
கரையோரப் பாதை – மருதானை தொடக்கம் பானந்துறை வரையான பாதை


