அஸ்வெசும இரண்டாம் கட்ட ஜூன் மாதக் கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பு

  • :
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் முறையின் இரண்டாம் கட்டத்துடன் சம்பந்தப்பட்ட 270,025 (இரண்டு இலட்சம் எழுபதாயிரத்து
இருபத்தைந்து) பயனாளிக் குடும்பங்களுக்கு மாத்திரம் 2026 ஜூன் மாத அஸ்வெசும கொடுப்பனவாக 3,287,163,750.00 ரூபாய் (மூன்று பில்லியன் இருநூற்று எண்பத்தேழு மில்லியன் நூற்று அறுபத்து மூவாயிரத்து எழுநூற்று ஐம்பது) நிதி 2026 ஜூன் மாதம் 23 ஆம் திகதி சம்பந்தப்பட்ட பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட பயனாளிகள் தமது நலன்புரிக் கொடுப்பனவை 2026 ஜூன் மாதம் 23 ஆம் (இன்று) முதல் தமது அஸ்வெசும வங்கிக் கணக்கில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும் என்றும் சபை மேலும் தெரிவித்துள்ளது

Related Articles