இலங்கை தாய்லாந்து இரு தரப்பு பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் தொடர்புகளை மேலும் பரவலாக்குவதற்கு நடவடிக்கை
இலங்கை மற்றும் தாய்லாந்து இடையே காணப்படும் நீண்ட கால பொருளாதார, கலாச்சார மற்றும் வரலாற்று தொடர்புகளை, தற்போதைய உலக முன்னேற்றத்திற்கு ஏற்ற விதமாக வர்த்தகம், சுற்றுலா, தொழில்நுட்பம் மற்றும் நிலைபேறாண அபிவிருத்தித் துறை ஊடாக மேலும் விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் தயார் என வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற இலங்கை தாய்லாந்து வர்த்தக சபையின் (Sri Lanka–Thailand Business Council) 25வது வருடாந்த பொதுச்சபையில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் அண்மையில் (19) இதனை குறிப்பிட்டார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், கடந்த 25 வருட காலத்தில் இலங்கையில் தனியார் துறை மற்றும் மற்றும் தாய்லாந்து இடையே இருதரப்பு பொருளாதார தொடர்புகளை முன்னேற்றுவதற்காக இந்த வர்த்தக சபை மேற்கொண்ட நிலையான மற்றும் முன்னிலை வகிக்கும் செயற்பாட்டை மதிப்பீடு செய்தனர். 25வருடங்கள் என்ற மைல் கல்லை எட்டுவது வெறும் முயற்சி மட்டுமல்லாது, அந்நியோந்ய நம்பிக்கை மற்றும் தொடர்புகளைப் பேணிப் பாதுகாத்ததற்கான பெறுபேறுகள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்


