நாட்டில் இதய நோய் சிகிச்சை நடவடிக்கையில் சிறந்த முன்னேற்றம்.
எதிர்வரும் வாரத்தில் நாட்டின் சுகாதார சேவையில் மேலும் 04 கேத் ஆய்வகங்கள் (Cath Lab) இணைக்கப்பட உள்ளன.
நாட்டில் இதய நோய் சம்பந்தமான சிகிச்சைத் துறையில் ஒரு சிறந்த முன்னேற்றத்தைக் வெளிப்படுத்தும் வகையில் எதிர்வரும் வாரத்தில்
நாட்டின் அரச மருத்துவமனை அமைப்பில் மேலும் 04 கேத் ஆய்வகங்கள் இணைக்கப்பட உள்ளன.
சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவர்களின் அறிவுறுத்தல்களின்படி, இதய நோய் கண்டறிதல் மேலும் விரிவுபடுத்தும் வகையில், இந்த புதிய ஆய்வகங்களை நிறுவ சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த கேத் லேப் அலகுகள் ஒவ்வொன்றின் மதிப்பும் ரூ. 300 மில்லியன் ஆகும், அதன்படி, இந்த 4 இயந்திரங்களுக்காக செலவிடப்பட்ட மொத்தத் தொகை ரூ. 1200 மில்லியன் ஆகும்.
அதன்படி, ஜூன் 27 ஆம் தேதி: யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஒரு கேத் ஆய்வகமும், ஜூன் 30 ஆம் தேதி: களுபொழில தெற்கு கொழும்பு போதனா மருத்துவமனையில் ஒரு கேத் ஆய்வகமும், ஜூலை 2 ஆம் தேதி: கொழும்பு தேசிய மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சைக்காக இரண்டு கேத் ஆய்வகங்களும் இணைக்கப்பட உள்ளன.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் இதய சிகிச்சைக்காக ஒரு ஆய்வகம் உள்ளது, அது தற்போது ஒரு நாளைக்கு சுமார் 15 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறது. இந்த 02 புதிய ஆய்வகங்கள் நிறுவப்படுவதால், இலங்கை தேசிய மருத்துவமனையில் உள்ள இதய ஆய்வகங்களின் எண்ணிக்கை 03 ஆக உயரும், அதன்படி, ஒரு நாளைக்கு சுமார் 45 நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்படும் என்று தெரிவிக்கபடுகிறது.
இலங்கையில், இந்த கேத் ஆய்வகங்களால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் முக்கிய சேவைகளில் கரோனரி ஆஞ்சியோகிராம், (Coronary Angiogram) ஆஞ்சியோபிளாஸ்டி/பிசிஐ (Angioplasty / PCI, பேஸ்மேக்கர் பொருத்துதல் (Pacemaker Implantation), டிஏவிஐ (TAVI) மற்றும் வால்வு சிகிச்சை, திறந்த இதய அறுவை சிகிச்சை, குழந்தைகளுக்கான இதய நோய் சிகிச்சை போன்றவை அடங்கும்.
கேத் லேப் சேவைகளை வழங்குவதன் மூலம் பொதுமக்ககள் பல நன்மைகளை பெற உள்ளனர்.மாரடைப்பு ஏற்பட்டால் விரைவான, உடனடி சிகிச்சை அளித்து உயிர்களைக் காப்பாற்றுவது இதில் அடங்கும். பெரிய அறுவை சிகிச்சைகள் தேவையில்லை, பைபாஸ் அறுவை சிகிச்சைகளுக்குப் பதிலாக எளிய சிகிச்சை, விரைவான குணமடைதல், மற்றும் நோயாளி மிகக் குறுகிய காலத்தில் குணமடைந்து வீடு திரும்புதல் ஆகியவை இதன் நன்மைகளாகும்.
இந்த அதிநவீன மேம்பட்ட அமைப்புகள், செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான நிகழ்நேரப் (Real Time) தொழில்நுட்பத்தை உள்ளடக்கியுள்ளன. இது ஃபுளூரோஸ்கோபியின் போது கதிர்வீச்சு அளவை கணிசமாகக் குறைத்து, உயர்தரப் படங்களைப் பெறவும் உதவுகிறது.
இது மிகவும் தெளிவான படங்களை வழங்குவதன் மூலம், குறிப்பாக சினி இமேஜிங் இல்லாத செயல்முறைகளில், மருத்துவர்கள் சிக்கலான தலையீடுகளை மிகவும் பாதுகாப்பாகவும் நம்பகத்தன்மையுடனும் செய்ய உதவுகிறது.
இந்த இயந்திரங்களின் ஒரு தனித்துவமான அம்சம், நேரடி DDS காட்சிப்படுத்தல் தொழில்நுட்பமாகும். இமேஜிங் தேவையின்றி, ஃப்ளூரோஸ்கோபியின் போது ஸ்டென்ட் கட்டமைப்புகளை மிகத் துல்லியமாகக் காட்டுகிறது. அதே வேளையில் கதிர்வீச்சு அளவை மேலும் குறைப்பதற்கும், சிக்கலான பெர்குடேனியஸ் கரோனரி இன்டர்வென்ஷன் (PCI) மற்றும் கரோனரி தமனி ஸ்டென்ட் பொருத்தும் செயல்முறைகளுக்குத் தேவைப்படும் நேரத்தைக் கணிசமாகக் குறைப்பதற்கும் உதவுகிறது.
மேலும், இந்த இயந்திரங்களின் சிறப்பு அம்சமாக நோயாளியின் உடலின் எந்தப் பகுதிக்கும் நொடிகளில் எளிதாகச் செல்ல வழிவகுத்து, அதன்மூலம் மருத்துவத் திறனையும் மேம்படுத்துகின்றன.
இந்த இயந்திரங்கள் சுற்றியுள்ள திசுக்களுக்குத் தேவையற்ற கதிர்வீச்சுப் பரவலைக் குறைக்கின்றன. சிக்கலான PCI மற்றும் கரோனரி ஸ்டென்டிங் செயல்முறைகளின் போது கதிர்வீச்சைக் கட்டுப்படுத்துவதற்கு இது மிகவும் முக்கியமானது.
மேலும் ஒரே பெரிய திரையில் காண்பிக்கும் திறன் கொண்டது. இது மருத்துவக் குழுவினர் ஒரே நேரத்தில் பல படங்களைப் பார்க்கவும் ஒப்பிடவும் உதவுகிறது, இதன்மூலம் வேகமான மற்றும் மிகவும் துல்லியமாக நோயினை கண்டறிதல் மற்றும் தீர்வினை காண உதவுகிறது.
நாட்டின் மருத்துவமனை கட்டமைப்பில் இந்த 04 அமைப்புகள் (கேத் லேப்ஸ்) சேர்க்கப்படுவதன் மூலம், இதயம் மற்றும் இரத்த நாளங்கள் தொடர்பான நோய்களைக் கண்டறிவதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் உள்ள காத்திருப்புப் பட்டியல்களைக் குறைத்து, நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த சேவையை வழங்க முடியும்.


