பாடசாலை மாணவர்கள் டெங்கு நுளம்புக் கடியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளல் தொடர்பாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது
பாடசாலை மாணவர்கள் டெங்கு நுளம்புக் கடியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, பாடசாலைகளில் தங்களது சீருடைக்கு மேலதிகமாக கைகள் மற்றும் கால்களை முழுமையாக மூடக்கூடிய பொருத்தமான ஆடைகளை அணிவதற்கு மாணவர்களுக்கு அனுமதி வழங்குமாறு அறிவுறுத்தல்களை அனைத்து அதிபர்களுக்கும் வழங்கியுள்ளது.
அத்துடன் முறையான தரத்தைக் கொண்ட கொசு விரட்டிகளைப் பயன்படுத்துமாறும், மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டுமாறும் அவ்வறிவித்தலில் மேலும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


