ஜனாதிபதி நிதியத்தினால் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற வடமாகாண மாணவர்களை பாராட்டும் நிகழ்வு பிரதமர் தலைமையில்..

ஜனாதிபதி நிதியத்தினால் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற வடமாகாண மாணவர்களை பாராட்டும் நிகழ்வு பிரதமர் தலைமையில்..
  • :

ஜனாதிபதி நிதியத்தினால் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற வடமாகாண மாணவர்களை பாராட்டும் நிகழ்வு பிரதமர் தலைமையில் கிளிநொச்சியிலுள்ள நெலும்பியச மண்டபத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வட மாகாணத்தில் உயர்தரப் பரீட்சையில் சிறந்து விளங்கிய மாணவர்கள் இந் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் 2023/2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்தி சிறந்து விளங்கிய மாணவர்களை கௌரவிக்கும் வட மாகாண நிகழ்ச்சித் திட்டமாக இது அமைந்திருந்தது.

இதன்போது யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,முல்லைத்தீவு,மன்னார் மற்றும் வவுனியா, மாவட்டங்களில் 2023/2024 ஆம் ஆண்டுகளுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில், 6 பாடத்துறைகளின் கீழ் 1 முதல் 10 வரையான இடங்களைப் பெற்ற 300 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

 

Related Articles