மனம்பிடிய மற்றும் சோமாவதிய பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை

மனம்பிடிய மற்றும் சோமாவதிய பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை
  • :

இன்று (18) காலை 10.20 மணிக்கு, விக்டோரியா நீர்த்தேக்கத்தின் 06 வான் கதவுகள் - தலா 70 செ.மீ அளவும், ரந்தெனிகல நீர்த்தேக்கத்தின் 02 வான் கதவுகள் - தலா 2.5 மீ மற்றும் 1 மீ ஆகவும், மற்றும் ரந்தம்பே நீர்த்தேக்கத்தின் 02 வான் கதவுகள் - தலா 2 மீ மற்றும் 2.5 மீ வரைம் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, மனம்பிடிய மற்றும் சோமாவதிய பகுதிகளில் வெள்ள அபாயம் இருப்பதாகவும், எனவே மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே, இந்த பகுதிகளுக்கு சுமார் 6 மணி நேரத்திற்குள் தண்ணீர் வந்தடையும் என்று அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேலும் அறிவித்துள்ளது.

மேலும், மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், லங்காபுர பிரதேச செயலகப் பிரிவில் உள்ள சுங்காவில முதல் சோமாவதி வரையிலான பிரதான வீதியில் பயணிக்கும் அனைத்து போக்குவரத்தும் இன்று (18) காலை 11.00 மணி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை மாவட்ட ஊடகப் பிரிவு

Related Articles