கரைச்சி கிழக்கு கிராமிய மீனவர் அமைப்பின் தொழிலாளர்களுக்கான ஓய்வு மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(29.08.2025) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரைச்சி கிழக்கு கிராமிய மீனவர் அமைப்பின் தொழிலாளர்களுக்கான ஓய்வு மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(29.08.2025) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
2024/25 பெரும்போகத்திற்கான இழப்பீட்டு காசோலைகள் விநியோகிக்கும் நிகழ்ச்சி நேற்று (28) பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் விவசாயம், கால்நடை வளங்கள், நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே. டி. லால் காந்த மற்றும் வீட்டுவசதிகள் பிரதி அமைச்சர் டி.பி. சரத் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
வடக்கு மாகாணத்தில் கல்வியை முடித்துவிட்டு கல்வியை பாதியில் நிறுத்திய அனைத்து இளைஞர்களையும் தொழிற்கல்விக்கு வழிநடத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமைப் பணியாகும் என்று தொழிற்கல்வி துணை அமைச்சர் நளின் ஹேவகே கூறுகிறார்.
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நீர்ப்பாசனம் எமது உரிமை வேலைத்திட்டத்தின் கீழ் பொலன்னறுவை மாவட்டத்தின் எலஹெர பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள கடுகெலியாவ வாவியைப் புனரமைக்கும் பணிகள் நேற்று (28) ஆரம்பிக்கப்பட்டன.
அரசாங்கத்தின் இலவச மானிய மின்னிணைப்பு செயற்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படாத மின்னிணைப்பினை பெற வசதியற்ற குடும்பங்களுக்கான நிதியுதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.(25/Aug)
அரசாங்கத்தினால் அரச உத்தியோகத்தர்களின் மொழித்துறையை விருத்தி செய்யும் நோக்கில் அரச மொழிகள் திணைக்களத்தினால் மொழிப்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
சுற்றுலாத்துறையில் இந்திய முதலீட்டாளர்ளின் காணிக்குத்தகை செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (22.08.2025) பி.ப 02.30. மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
போஷாக்குத் தொடர்பாகத் தெளிவூட்டும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (21) நடைபெற்றது.
தேசிய விளையாட்டு வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சித் தொடரின் ஒரு பகுதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் பல்வேறு அரச திணைக்களங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்களுக்கு போஷாக்கின் முக்கியத்துவம் குறித்து தெளிவு படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு அமைந்தது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனின் வழிகாட்டுதலின் கீழ், மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்ஜினி முகுந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையின் வைத்தியர் சிவலிங்கம் விவேகானந்தன் வளவாளராகக் கலந்து கொண்டு போஷாக்குத் தொடர்பான விரிவாகத் தெளிவு படுத்தினார்.
போஷாக்கு மூலம் புத்திஜீவிகளை உருவாக்க முடியும். ஊட்டச்சத்து 2 வயது வரை சரியாக ஊட்டப்பட்டால் ஆரோக்கியமான சமூகத்திற்கான புத்திஜீவிகள் உருவாகுவார்கள். தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு சரியான போசனை ஊட்டப்படுவதுடன், வாழ்க்கை முறை மற்றும் மனப்பாங்கில் ஆரோக்கியத்தின் வெற்றி தங்கியுள்ளது.
தொற்றா நோய்களில் அழுத்தம் என்பது மாத்திரம் ஒரு மனிதனை இலகுவாகக் கொன்று விடுவதற்கு போதுமானது. அது வாழ்க்கையிலும் வாழ்கின்ற முறையிலும் தங்கியுள்ளது. தொற்றா நோய்களைப் பொறுத்தவரை போஷாக்கான உணவு ஊட்டப்பட்டால் ஒரு வயதில் இருந்தே கொழுப்பு படிய ஆரம்பித்து, தற்காலத்தில் அதிகமாகக் காணப்படும் கொலஸ்ரோல் போன்றவற்றை உருவாக்கும்.
எனவே ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்கு உணவில் நிலைபேறாண நிலை பேணப்பட வேண்டும். குறிப்பாக உள்ளூர் பழவகைகள் மற்றும் இலைக் காய்கறிகளை பாரம்பரியமானவை, தற்காலத்திற்குப் பொறுத்தவரை என ஒதுக்கி விடாது, அவற்றை உணவிற்கு பயன்படுத்துவதன் அவசியம் தெளிவு படுத்தப்பட்டதுடன் அவற்றில் பேண்தகு நிலை பேணப்பட வேண்டியதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர பிரிவில், திராய்மடு பிரதேசத்தில் அமைந்துள்ள புதிய மாவட்ட செயலக வளாகத்தில் அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
யாழ்ப்பாணம் மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல் வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ வசந்த சமரசிங்க, அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (12.08.2025) மு.ப 10.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு மற்றும் திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் அரசகரும மொழிகள் தினம் மற்றும் அரசகரும மொழிகள் வாரத்தை முன்னிட்டு திருகோணமலை கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலையில் நடைபெற்ற போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கும் நிகழ்வு இன்று (12) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
சீதாவாக்க பிரதேச செயலகப் பிரிவில் உள்ள துன்னான சுமனஜோதி முன்பள்ளி மற்றும் கூடலுவில க்ரேட் ஷைன் முன்பள்ளியில் குழந்தைகளின் பெற்றோருக்கான குழந்தை பாதுகாப்பு, ஆரம்பகால குழந்தை பருவ வளர்ச்சி மற்றும் குழந்தை துஷ்பிரயோகத்திலிருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த 5 ஆம் திகதி நடைபெற்றது.
மிஹிந்தலை பன் கைத்தொழில் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான செயலமர்வு அண்மையில் நடைபெற்றது. இது எட்டு நாள் இரவு பகல் பயிற்சியாகும் முழு நேரப் பயிற்சி.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]