2024/25 பெரும்போகத்திற்கான இழப்பீட்டு காசோலைகள் விநியோகிக்கும் நிகழ்ச்சி நேற்று (28) பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் விவசாயம், கால்நடை வளங்கள், நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே. டி. லால் காந்த மற்றும் வீட்டுவசதிகள் பிரதி அமைச்சர் டி.பி. சரத் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
மேலும், விவசாய காப்பீட்டு சபையின் பிரதிநிதிகளுக்கு அவர்களின் சேவைகளைப் பாராட்டி நினைவுப் பரிசுகள் மற்றும் சேவை பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


