சகவாழ்வு பசுமை சைக்கிள் சவாரி நிகழ்வு கடந்த 04 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சகவாழ்வு பசுமை சைக்கிள் சவாரி நிகழ்வு கடந்த 04 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தேசிய தொல்பொருள் தினத்தை முன்னிட்டு மத்திய கலாச்சார நிதியத்தின் சீகிரியா திட்டத்தின் கீழ் இயங்கும் இப்பன்கட்டுவேவ தொல்பொருள் தளத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "கல்லறைகளிலிருந்து வெளிப்பட்ட இலங்கை பாரம்பரியத்தின் பிரதிபலிப்பு" என்ற கருப்பொருளின் கீழ் தொல்பொருள் கண்காட்சி நிகழ்ச்சியின் தொடக்க விழா நேற்று (7) ஆரம்பமானது.
இந்தியாவிலிருந்து மீளத் திரும்பியவர்களின் சுமூகமான மீள் ஒருங்கிணைப்பிற்கான உதவித் தொகையானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் நேற்று (07.07.2025) காலை 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
வியாபாரத் திட்டத்தைத் தயாரித்தல் உட்பட பிரயோகப் பயிற்சி பட்டறை ஜூலை 07,08 மற்றும் 09 திகதிகளில் பல்கலைக்கழகத்தில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
2022- 2025 பங்குபற்றல் உபாய வழிகள் அமைவாக அம்பாறை பழங்குடி மக்கள் ஒரு தொகுதியினரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கான விசேட திட்டமொன்று
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2025/26 ஆண்டிற்கான பொருளதார தொகைமதிப்பு விவசாயம் சார் நடவடிக்கை தொடர்பான தெளிவூட்டும் வேலைத்திட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட புள்ளிவிபரவியலாளர் ரீ.ஜெய்தனன் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (01) இடம் பெற்றது.
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் அனுசரணையுடன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக விதாதா பிரிவின் ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை (27.06.2025 ) பனை வெல்லம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
பொல்வதுமோதர ஆற்றில் உள்ள தடைகளை அகற்றும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கருவப்பட்டை அபிவிருத்தித் திணக்களத்தின் முதல் பிராந்திய அலுவலகம் இன்று (01) காலை கம்பஹா, சியனே கட்டிடத்தின் 6வது மாடியில் திறக்கப்படும்.
“இலங்கை தேயிலை (Ceylon Tea)” எனும் பெயரில் உலகம் முழுவதும் பிரபலமாக சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்த இலங்கைக்கு கவர்ச்சியை ஏற்படுத்துவதற்காக ஹப்புத்தளை பிரதேசத்தை மையமாகக் கொண்டு புதிய சுற்றுலா வலயம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு ஊவா மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தால் மாவட்ட மட்டத்தில் நாடு முழுவதும் பரவியுள்ள பிராந்திய ஊடகவியலாளர்களுக்காக நடத்தப்பட்ட 'அசிதிசி பியவர' - களுத்துறை மாவட்ட ஊடகவியலாளர் செயலமர்வு, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் களுத்துறை மாவட்ட செயலாளர் ஜனக கே. குணவர்தன ஆகியோரின் தலைமையில், அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டாரவின் வழிகாட்டுதலின் கீழ், களுத்துறை மாவட்ட செயலகத்தில் அண்மையில்; (21) நடைபெற்றது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு திட்டத்துடன் இணைந்து ஜூன் 20 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை பல தொடர் நிகழ்ச்சிகள் கொழும்பு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளன.
காலி மாவட்ட ஊடகப் பிரிவு இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டு அமைச்சுடன் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட 2025 - 49 வது தேசிய விளையாட்டு விழா காலி மாவட்டத்தில் நடாத்தப்படுவது தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் (18) காலி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]