'அசிதிசி பியவர' களுத்துறை மாவட்ட ஊடகவியலாளர் செயலமர்வு வெற்றிகரமாக நிறைவடைந்தது

'அசிதிசி பியவர' களுத்துறை மாவட்ட ஊடகவியலாளர் செயலமர்வு வெற்றிகரமாக நிறைவடைந்தது
  • :

அரசாங்க தகவல் திணைக்களத்தால் மாவட்ட மட்டத்தில் நாடு முழுவதும் பரவியுள்ள பிராந்திய ஊடகவியலாளர்களுக்காக நடத்தப்பட்ட 'அசிதிசி பியவர' - களுத்துறை மாவட்ட ஊடகவியலாளர் செயலமர்வு, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் களுத்துறை மாவட்ட செயலாளர் ஜனக கே. குணவர்தன ஆகியோரின் தலைமையில், அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டாரவின் வழிகாட்டுதலின் கீழ், களுத்துறை மாவட்ட செயலகத்தில் அண்மையில்; (21) நடைபெற்றது.

அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ். கே.ஜே. பண்டார இந்தப் செயலமர்வின்; நோக்கம் குறித்து விளக்கமளித்தார்.

ஊடகவியலாளர்களிடம் உரையாற்றிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, களுத்துறை மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக களுத்துறை மாவட்ட ஊடகவியலாளர்கள் ஆற்றிய பங்கிற்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகம் பிரசன்ன பெரேரா, ஊடக நெறிமுறைகள் மற்றும் இலங்கையில் தற்போதைய ஊடகப் பயன்பாடு குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்தார், அதே நேரத்தில் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர் சிசிர பரண யாப்பா, இலங்கையில் தற்போதைய ஊடக செயல்பாடு மற்றும் மாவட்ட பத்திரிகையாளரின் பங்கு குறித்து உரையாற்றினார்.

அத்துடன், இலங்கை பத்திரிகை மன்றத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரியன் ஆர். விஜய பண்டார, பத்திரிகையின் சித்தாந்த பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து ஊடகவியலாளர்;களுக்கு விளக்கமளித்தார்.

Related Articles