பொல்வதுமோதர ஆற்றில் உள்ள தடைகளை அகற்றும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வெள்ளத்தால் அடிக்கடி சேதமடையும் நெற்பயிர்கள் மற்றும் பிற விவசாய நிலங்களைப் பாதுகாக்கவும், விவசாய நிலங்களில் நீர் வடிந்தோடாததால் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறைக்கவும், வெள்ளத்தால் ஏற்படும் பொதுமக்களின் சிரமங்களைக் குறைக்கவும் தென் மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் தற்போது பொல்வதுமோதர ஆற்றில் உள்ள தடைகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
மாத்தறை மாவட்ட ஊடகப் பிரிவு


