சுற்றுலாத்துறையில் இந்திய முதலீட்டாளர்ளின் காணிக்குத்தகை செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (22.08.2025) பி.ப 02.30. மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் இந்திய முதலீட்டாளர்கள் இலங்கையுடன் இணைந்த வகையில் யாழ்ப்பாண பகுதிகளில் ஆன்மீகம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலாத் துறைகளில் முதலீடுகளை மேற்கொள்வதில் காணிக்குத்தகை ஏற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையின் முதலீட்டு பிரிவின் பிரதிப்பணிப்பாளர், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், இந்திய முதலீட்டாளர் குழு, கரையோர வளங்கள் மற்றும் பாதுகாப்பு முகாமைத்துவ பிரிவின் பொறியியலாளர் , மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மருதங்கேணி பிரதேச செயலாளர் ,பருத்தித்துறை உதவி பிரதேச செயலாளர் , சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய விடய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.


