சிக்குன்குனியா நோய் இன்னும் தொற்று பரவும் தன்மைக்கு வரவில்லை என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
இது தொடர்பாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு உத்தியோகபூர்வ காணப்படும் நிலைமைகளின் அடிப்படையில் எதிர்வரும் சில நாட்களில் அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கொரோனா தொற்றுத் தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர்; சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ சிங்கப்பூர், இந்திய போன்ற நெருக்கமான நாடுகளில் ஏதோ ஒரு அளவில் ஒரு அளவில் அறிக்கையிடப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாக சுகாதார பிரிவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
அண்மை காலமாக இடம்பெற்ற முறையில் ஆபத்துக்களுக்கு இன்னும் தகவல் கிடைக்காமையினால் அரசாங்கம் இது குறித்து விமான நிலையத்திலிருந்து அவசியமான தலையீடுகளை மேற்கொண்டு வருவதுடன், அது தொடர்பாக சுகாதார செயலாளர் கடந்த தினம் ஒன்றில் அரிக்கி ஒன்றை வெளியிட்டதாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.