தலைக்கு எண்ணெய் வைக்கும் அரச விழாவானது, சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் பங்கேற்புடன் கண்டி ஸ்ரீ மஹா நாத விகாரையில் இன்று (16) காலை இடம்பெற்றது.
சியம் மஹா நிக்காயவின் மல்வத்த மற்றும் அஸ்கிரி பீடங்களின் அனுநாயக்க தேரர்களின் ஆசீர்வாதங்களுடன், காலை 9.04 மணிக்கு சுப நேரத்தில் வடக்கு திசையை நோக்கி தலைக்கு எண்ணெய் வைக்கும் அரச விழா நடைபெற்றது.
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சும், ஆயர்வேதத் திணைக்களமும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
ஸ்ரீ தலதா மாளிகையின் பர்மா ராஜா மற்றும் மிஹார யானைகளுக்கு எண்ணெய் தடவி உணவளிக்கும் நிகழ்வும் வெகுஜன ஊடக அமைச்சரின் பங்கேற்புடன் நடைபெற்றது.