பெண்கள், ஒட்டுமொத்த சமூக அமைப்பிலிருந்தும் தவிர்க்க முடியாத முக்கிய பங்காளர்கள்

பெண்கள், ஒட்டுமொத்த சமூக அமைப்பிலிருந்தும் தவிர்க்க முடியாத முக்கிய பங்காளர்கள்
  • :

ஒட்டுமொத்த சமூக அமைப்பிலிருந்து பெண்கள் தவிர்க்க முடியாத முக்கிய பங்காளர்களாக இருப்பதோடு, அந்த சமூக அமைப்பின் படைப்பாற்றல் கலைஞர்களும் பெண்கள் தான். இதனால்தான் சிறந்த எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி "உலகம் சூரியனின் கதிர்கள் மற்றும் தாயின் பாலில் இருந்து உருவாக்கப்பட்டது" என்று கூறினார்.

நமது நாட்டின் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்கள் நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சாரத் துறைகளுக்கு பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தாலும், ஒரு சமூகமாக நாம் இன்னும் அவர்களுக்குத் தகுதியான சமூகப் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் சுதந்திரத்தை அளிப்பதில் இன்னும் தோல்வியடைந்து கொண்டிருக்கிறோம். இந்த விஷயத்தில் நமது பாராளுமன்றத்திற்கு மிகப்பெரிய பொறுப்பு இருப்பதாக நான் நம்புகிறேன்.

2025 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் இந்த வேளையில், நமது அன்புக்குரிய சகோதரிகளின் கண்ணியத்தைப் பாதுகாப்பதும், அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சாரத் துறைகளில் பாலின வேறுபாடுகள் மற்றும் சமூக வேறுபாடுகளிலிருந்து விரைவாக விடுதலை பெறுவதும் நம் முன் உள்ள சவாலாக காணப்படுகின்றது. இந்த விடயத்தில் நமது பாராளுமன்றத்திற்கு மிகப்பெரிய பொறுப்பு இருப்பதாக நான் நம்புகிறேன்.

அதுவரை மகளிர் தினமாகக் கொண்டாடப்பட்ட பிப்ரவரி 28 ஆம் திகதிக்குப் பதிலாக, 1917 ஆம் ஆண்டு அப்போதைய சோவியத் ரஷ்யாவில் பெண்கள் வாக்களிக்கும் உரிமையை வென்றபோது, மார்ச் 8 ஆம் திகதி பெண்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகள் பற்றிப் பேசுவதற்கான நாளாக மாறியது. இது அரசியலில் பெண்களின் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

அதன்படி இலங்கைப் பெண்களின் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தைக் குறிக்கும் அதிகூடிய பெண் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட தற்போதைய பத்தாவது பாராளுமன்றத்தின் மூலம் நமது அன்பான தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு மிகவும் கண்ணியமான, பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான புதிய அணுகுமுறையில் பங்களிக்கும் ஆற்றல் நம்மிடம் உள்ளது என்று நம்புகிறேன்.

இன்று அதற்குத் தேவையான பலத்தையும் தைரியத்தையும் பெற பிரார்த்திப்பதோடு, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

கௌரவ சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]