திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அஞ்சல் மூல வாக்குச்சீட்டு விநியோகம் தொடர்பிலான செயலமர்வு.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அஞ்சல் மூல வாக்குச்சீட்டு விநியோகம் தொடர்பிலான செயலமர்வு.
  • :

2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு கடமையில் ஈடுபடவுள்ள உதவித் தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கான அஞ்சல் மூல வாக்குச்சீட்டு விநியோகம் தொடர்பிலான செயலமர்வானது இன்று (04) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணியளவில் நடைபெற்றது.

வாக்குச்சீட்டு விநியோகத்தின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உதவித் தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கு மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் எஸ். கே. டி. நிரஞ்சன் அவர்கள் தெளிவுபடுத்தினார்.

இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் மற்றும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Related Articles