தேசிய கணக்காய்வு (திருத்த) சட்டமூலத்தை கௌரவ (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன நேற்று (22) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

தேசிய கணக்காய்வு (திருத்த) சட்டமூலத்தை கௌரவ (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன நேற்று (22) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக இளைஞர் தொழில்முயற்சியாளர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் உபகுழுவொன்று நியமிக்கப்பட்டது.
அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “சனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (09) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிகள் போக்குவரத்து பஸ்களில் செல்லும் பயணிகளுக்கு ஆசனப் பட்டி அணிவதைக் கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவித்தல் இம்மாதம் 31 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் கௌரவ அமைச்சரும், பாராளுமன்ற சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமையின் (House Democracy Partnership) நிறைவேற்றுப் பணிப்பாளர் டெரெக் லூய்டன் (Derek Luyten) உள்ளிட்ட குழுவினர் கடந்த 26 ஆம் திகதி கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை
பொலிஸ்மா அதிபர் (சட்டத்தரணி) பிரியந்த வீரசூரிய அண்மையில் (22) கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைப் பாராளுமன்றத்தில் சந்தித்தார்.
தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நாம் மறக்கவில்லை, அவற்றை நிச்சயம் நிறைவேற்றுவோம். காணி விடுவிப்பு நடவடிக்கைகளும் ஆரம்பமாகியுள்ளன, என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் நேற்று (22) பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தமது பிரதான பணியான 'ஒழுங்குபடுத்தல்' பணியை முறையாக செய்வதற்கு தற்பொழுது காணப்படும் சட்டக்கட்டமைப்பில் பணியாற்றுமாறு அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் (கோப்) ஆலோசனை வழங்கப்பட்டது.
2025 செப்டெம்பர் மாதம் முதலாவது பாராளுமன்ற வாரத்திற்கான பாராளுமன்ற அலுவல்கள் குறித்து கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் தலைமையில் (21) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பதவியணித் தலைமையதிகாரியும், பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன தெரிவித்தார்.
ஒவ்வொரு மாணவருக்கும் தலைசிறந்த மட்டத்திலான பாடசாலைக் கல்வியை வழங்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது
- கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு
பாராளுமன்றக் குழுக்கள் தனக்கு வழங்கப்பட்டுள்ள கடமையின் அடிப்படையில் அரசாங்க அதிகாரிகளின் பொறுப்புக் கூறலை ஆராய முடியும் என முன்னாள் கணக்காய்வாளர் நாயகமும், அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) ஆகியவற்றின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான எஸ்.சி.மாயாதுன்னே தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற செயலமர்வொன்றில் வளவாளராகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் அதனைக் குறிப்பிட்டார்.
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘இலங்கையின் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறைச் சங்கம் என்பவற்றின் நடவடிக்கைகள்’ குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவூட்டும் செயலமர்வொன்று 2025 ஜூலை 11 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இலங்கைக்கான இந்தோனேசியத் தூதுவர் கௌரவ திவி குஸ்டினா டொபிங் (Dewi Gustina Tobing) அவர்கள் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைச் சந்தித்தார். பாராளுமன்றத்தில் அண்மையில் (09) இடம்பெற்ற இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் பங்குபற்றியிருந்தார்.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]