சுற்றுலாப் பயணிகளின் பயணத் திறனை விரிவுபடுத்துவதற்காக புதிய சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதும், ஊக்குவிப்பதும் தற்போதைய அரசாங்கத்தின் முதன்மைப் பணியாகும். அதன்படி, அடையாளம் காணப்பட்ட உள்நாட்டு சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துதல் உட்பட சுற்றுலாத் துறையை விரிவுபடுத்துவதற்காக இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் 500 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கு இணையாக, சுற்றுலாத் தலங்களில் அதிக நெரிசல் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்கவும், சுற்றுலாத் துறையின் திறனை மேம்படுத்தவும் ஒரு டிஜிட்டல் அமைப்பு அறிமுகப்படுத்தப்படும், மேலும், ஜப்பான் முதலீட்டின் ஆதரவுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தின் விரிவாக்கம் மேற்கொள்ளப்படும்.