கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு நீதிமன்றத்தில் மற்றும் மித்தெணியவில் இடம் பெற்ற வெடிச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் வினைத்திறன் மிக்கதாக மற்றும் அரசியல் தலையீடுகள் எதுவும் இன்றி இடம்பெறுவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு அரசாங்கம் தலையிட்டு வருவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (21) விசேட உரையொன்றை நிகழ்த்திய அமைச்சர் இதனை குறிப்பிட்டார். இந்த வெடிச்சம்பவம் தொடர்பாக அரசாங்கம் என்ற வகையில் வருந்துவதாகவும் அவர் கூறினார்.
தேசிய பாதுகாப்பு சீர்குழைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும், இந்தக் குற்றம் தொடர்பாக ஸ்ரீலங்கா பொலிஸ் முறையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், குற்றம் இடம்பெற்று எட்டு மணித்தியாலங்கள் நிறைவடைவதற்கு முன்னர் பொலிசாருக்கு குற்றவாளிகளை கைது செய்வதற்கு முடிந்ததாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்;
பொலிசாரின் திறமைகள் பாராட்டப்பட வேண்டும். அண்மைக் காலங்களில் நடந்த சில குற்றங்களுக்காக இன்றுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. அவை அனைத்தும் அரசியல் தொடர்புகளின் கீழ் இடம்பெற்ற குற்றங்கள். ஆனால் இன்று பொலிசாருக்கு விசாரணைகளை மேற்கொள்வதற்காக அவசியமான சுதந்திரங்களை அரசாங்கம் என்ற வகையில் வழங்கப்பட்டது. அதனால் விசாரணைகள் மிகவும் வினைத்திறன் மற்றும் வெற்றிகரமாக நடாத்தப்படுகின்றன. சில மணித்தியாலங்களுக்கு முன்னர் மித்தெணிய கொலையின் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன்னிறுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது என்றும் அமைச்சர் மேலும் விவரித்தார்.