🔸 பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்கு மூன்று உறுப்பினர்கள்
🔸 அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்கு மூன்று புதிய உறுப்பினர்கள்
ஆறு துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்குத் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர்களை கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன நேற்று (08) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அதற்கமைய 6 துறைசார் மேற்பவைக் குழுக்களில் பணியாற்றுவதற்கு பின்வரும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1. பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
• கௌரவ லக்ஸ்மன் நிபுண ஆரச்சி
• கௌரவ (திருமதி) சட்டத்தரணி சாகரிகா அதாவுத
• கௌரவ (திருமதி) சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி
• கௌரவ கந்தசாமி பிரபு
• கௌரவ விஜேசிரி பஸ்நாயக்க
• கௌரவ திலிண சமரகோன்
• கௌரவ (செல்வி) சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர
2. உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
• கௌரவ மஞ்ஜுள சுரவீர ஆரச்சி
• கௌரவ கே.இளங்குமரன்
• கௌரவ ரவீந்திர பண்டார
• கௌரவ தனுஷ்க ரங்கனாத்
• கௌரவ அசித நிரோஷண எகொட வித்தான
• கௌரவ ஷாந்த பத்ம குமார சுபசிங்ஹ
• கௌரவ (திருமதி) சட்டத்தரணி கீதா ஹேரத்
3. கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
• கௌரவ அபூபக்கர் ஆதம்பாவா
• கௌரவ (செல்வி) கிருஷ்ணன் கலைச்செல்வி
• கௌரவ (திருமதி) நிலூஷா லக்மாலி கமகே
• கௌரவ சுகத் வசந்த த சில்வா
• கௌரவ சுஜீவ திசாநாயக்க
• கௌரவ சஞ்ஜீவ ரணசிங்ஹ
• கௌரவ சுனில் றாஜபக்ஷ
4. சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
• கௌரவ முனீர் முலாபர்
• கௌரவ (டாக்டர்) நிஹால் அபேசிங்ஹ
• கௌரவ (திருமதி) சமன்மலீ குணசிங்ஹ
• கௌரவ (பேராசிரியர்) சேன நாணாயக்கார
• கௌரவ (டாக்டர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா
• கௌரவ ஜகத் மனுவர்ண
• கௌரவ ருவன் மாபலகம
5. சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
• கௌரவ ரொஷான் அக்மீமன
• கௌரவ உபுல் கித்சிறி
• கௌரவ (திருமதி) எம்.ஏ.சீ.எஸ். சத்துரி கங்கானி
• கௌரவ சுசந்த குமார நவரத்ன
• கௌரவ சுதத் பலகல்ல
• கௌரவ கிட்ணன் செல்வராஜ்
• கௌரவ சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத்
6. விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
• கௌரவ சதுரங்க அபேசிங்ஹ
• கௌரவ அர்கம் இல்யாஸ்
• கௌரவ லசித் பாஷண கமகே
• கௌரவ தனுர திசாநாயக
• கௌரவ (திருமதி) சட்டத்தரணி ஹசாரா லியனகே
• கௌரவ (டாக்டர்) ஜனக சேனாரத்ன
• கௌரவ சந்திம ஹெட்டிஆரச்சி
அத்துடன், பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக கௌரவ வசந்த சமரசிங்க, கௌரவ சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் கௌரவ அபூபக்கர் ஆதம்பாவா ஆகியோர் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.
மேலும், அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக கௌரவ அபூபக்கர் ஆதம்பாவா, கௌரவ அர்கம் இல்யாஸ் மற்றும் கௌரவ மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் ஆகியோரும், அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக கௌரவ சுனில் ரத்னசிரி ஆகியோர் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.