அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய, வெசாக் போயா தினத்தை முன்னிட்டு, 2025 மே மாதம் 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை, வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளது.
எனவே, 2025 மே மாதம் 12, 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் நாடு பூராகவும் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளையும், இறைச்சிக்காக மிருகங்களை பலியிடும் இடங்களையும், மூடுவதற்கும், பல்பொருள் அங்காடிகளில் இறைச்சி விற்பனையை நிறுத்தவும், சகலவிமதான பந்தய, சூதாட்ட விடுதிகள், கெசினோக்கள் மற்றும் கிளப்புகளை மூடுவதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.