மாலத்தீவில் செயல்படுத்தப்பட்டு வரும் காடுகளை மீண்டும் வளர்க்கும் திட்டத்திற்காக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கையின் பரிசாக, மாலத்தீவுக்கு 1000 உள்நாட்டு அல்லாத தாவரங்களை நன்கொடையாக வழங்கும் நிகழ்வு நேற்று (08) சுற்றாடல் அமைச்சில் நடைபெற்றது.
சுற்றாடல் அமைச்சர் டொக்டர் தம்மிகா படபெந்தி மற்றும் சுற்றாடல் பிரதி அமைச்சர அன்டன் ஜயக்கொடி ஆகியோரின் தலைமையில், இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய பல உள்நாட்டு அல்லாத தாவரங்கள் இலங்கையில் உள்ள மாலத்தீவு தூதரகத்தின் உயர் ஸ்தானிகர் மசூத் இமாத்திடம் கையளிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.